கல்விசாரா ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் தொழில் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் 26.04.2026 இன்று நிகாப் காடனில் நடைபெற்றது.

இந்நிகழ்வு இலங்கை கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் ஏ.எம். ஜமீல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கல்விசாரா ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

கல்விசாரா ஊழியர்களின் பதவி உயர்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்தல்

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்குதல்

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்து பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுதல்

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தல்

மத்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்விசாரா ஊழியர்களுக்கான PL1 சேவைப் பிரமாணக் குறிப்பு அனைத்து மாகாணங்களிலும் ஒரே மாதிரியாக அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்தல்

கல்விசாரா ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குதல்

இந்தக் கலந்துரையாடல் மூலம் கல்விசாரா ஊழியர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore