இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம்!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த இணக்கப்பாட்டை வௌியிட்டுள்ளதாக மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் என்பன விரைவில் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்குக் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore