இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் Molucca Sea பகுதியில், Ternate அருகே, சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக United States Geological Survey தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து Pacific Tsunami Warning Center சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடலோரப் பகுதிகளில் அலை அபாயம் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா மட்டுமின்றி, Philippines மற்றும் Malaysia உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கடலோரப் பகுதிகளில் 0.3 முதல் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நிலநடுக்கத்திற்குப் பின் aftershocks ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தோனேஷியா, உலகின் மிகவும் செயலில் உள்ள நில அதிர்வு வளையமான Pacific Ring of Fire பகுதியில் அமைந்துள்ளதால், இவ்வாறான நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.





