அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு, மனிதர்கள் மீண்டும் நிலாவை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று (ஏப்ரல் 1) அமெரிக்காவின் NASA அமைப்பின் Artemis II விண்வெளிப் பயணம், Kennedy Space Center இலிருந்து வெற்றிகரமாக புறப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் 4 விண்வெளி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் சுமார் 10 நாட்கள் நீடிக்கும் பயணமாக, பூமியிலிருந்து 400,000 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்கவுள்ளனர்.
இந்த பயணத்தின் போது, விண்கலம் நிலவிற்கு அருகில் சுமார் 8,000 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிஷனின் முக்கிய நோக்கம், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிலா இறக்கத் திட்டங்களுக்காக Orion விண்கலம் மற்றும் Space Launch System (SLS) ராக்கெட் ஆகியவற்றை சோதனை செய்வதாகும்.
விண்வெளி பயணத்தின் 6ஆம் நாளில், விண்வெளி வீரர்கள் நிலாவிற்கு மிக அருகிலும், பூமியிலிருந்து மிகத் தொலைவிலும் செல்லவுள்ளனர்.
இந்த Artemis II மிஷன், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மனிதர்களை நிலாவில் தரையிறக்கும் திட்டங்களுக்கான முக்கிய அடித்தளமாகக் கருதப்படுகிறது.
இந்த சாதனை, மனிதகுலம் மீண்டும் நிலாவில் நிலையான வாழ்வை நோக்கி நகரும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.





