“Walk for Peace” பயணம்: ‘அலோகா’ நாய் பயணிகள் பிரிவில் இலங்கைக்கு வர அனுமதி

இலங்கையில் நடைபெறவுள்ள “Walk for Peace” ஆன்மீக நிகழ்வை முன்னிட்டு, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த “அலோகா” எனும் நாய்க்கு விமானத்தின் பயணிகள் பிரிவிலேயே (cabin) பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“அலோகா” ஒரு சேவை நாயாக (service animal) அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், சரக்கு பிரிவிற்கு பதிலாக பயணிகள் அமர்விடத்திலேயே பயணம் செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

இந்த நாய்க்கு விசேட இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், “Walk for Peace” குழுவை வழிநடத்தும் Pannakara Thero அவர்களுடன் இணைந்து பயணம் செய்யவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த மீட்பு நாயான “அலோகா”, பிக்கு சமூஹத்துடன் அமைதி நடைபயணத்தில் கலந்து கொண்டு “Peace Dog” எனப் பிரபலமானது.

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற “Walk for Peace” நிகழ்ச்சி ஏப்ரல் 21 முதல் 28, 2026 வரை இலங்கையில் அரசு ஆதரவுடன் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பன்னகர தேரர் தலைமையிலான பிக்கு குழு, அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதி மரத்திலிருந்து பெறப்பட்ட போதி செடியை ஏந்தியபடி பங்கேற்க உள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore