தெதுரு ஓயாவில் மூழ்கி விபத்து: 2 பேர் உயிரிழப்பு – 6 பேர் காணாமல் போயினர்!

நிக்கவெரட்டிய, கோபெய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற குழுவொன்றில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sri Lanka Police தகவலின்படி, மொத்தம் 15 பேர் கொண்ட குழு ஒன்றாக ஆற்றில் குளிக்கச் சென்றபோது இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடவத்த பகுதியைச் சேர்ந்த 7 பேர் கோபெய்கனே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் இணைந்து குளிக்கச் சென்றபோது இவ்விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore