LPG எரிவாயு தட்டுப்பாடு இல்லை – வரவிருக்கும் மாதங்களுக்கு போதுமான விநியோகம் உறுதி

நாட்டில் எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு விநியோகம் வரவிருக்கும் மாதங்களிலும் போதுமான அளவில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்:
அரசு மற்றும் தனியார் விநியோகஸ்தர்களின் திட்டமிட்ட கப்பல் வரவுகளின் அடிப்படையில், எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இதன்படி,

  • லிட்ரோ காஸ் நிறுவனம் மார்ச் 28 அன்று 22,000 மெட்ரிக் டன் எரிவாயுவை பெற உள்ளது.
  • மேலும் ஏப்ரல் மாதத்தில் மேலும் 22,000 மெட்ரிக் டன் வரவுள்ளது.

அதேபோல்,
-தனியார் நிறுவனம் லாஃப்ஸ் காஸ் நிறுவனமும்,

  • மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் 8,000 மெட்ரிக் டன்,
  • ஏப்ரல் 25 முதல் 27 வரை 21,000 மெட்ரிக் டன்
    எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாக அரசுக்கு அறிவித்துள்ளது.

சாதாரணமாக லாஃப்ஸ் நிறுவனம் மாதத்திற்கு 7,000 முதல் 8,000 மெட்ரிக் டன் வரை உள்ளூர் சந்தைக்கு வழங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களின் மொத்த விநியோகம், நாட்டின் தேவையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், விநியோக முறையில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், தேவையாயின் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள லாஃப்ஸ் நிறுவன சேமிப்பு வசதிகளை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி முன்வைத்த யோசனை தொடர்பாக தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore