2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் பிளேஆஃப் சுற்று போட்டிக்கான வாய்ப்பை ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இழந்துள்ளன.
நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் கடைசி பந்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது.
அதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பிளேஆஃப் சுற்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
இதனையடுத்து IPL 2026 தொடரின் பிளேஆஃப் போட்டிக்கான போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.




