மன்னார் – தலைமன்னார் வீதியில் பஸ் விபத்து: 9 தொழிலாளர்கள் படுகாயம்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பனை மரம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்து இடம்பெற்றபோது, குறித்த பேருந்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இருந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 9 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore