BREAKING: மின் கட்டண அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

  • அதன்படி 0 – 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது.- இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது- மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 61 – 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore