ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (15) காலை மல்வத்து மகா விஹாரைக்கு சென்று, சியாம் நிக்காயாவின் மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் மிக வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி, தேரரின் நலனை விசாரித்து சிறிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்நிகழ்வின்போது, தேரர் “செத் பிரித்” ஓதியதுடன், ஜனாதிபதி மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் சிங்கள–தமிழ் புத்தாண்டு ஆசீர்வாதங்களை வழங்கினார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





