தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக சம்மாந்துறை ஆக்கில் தப்லீகி நியமனம்

சம்மாந்துறையைச் சேர்ந்த சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் – தப்லீகும் இஸ்லாம் அறபுக்கல்லூரியின்பழைய மாணவருமான ஆக்கில் தப்லீகி அவர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் தங்கப் பதக்கம் பெற்ற சிறந்த மாணவராக விளங்கியதுடன், அதே பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் கட்டாரில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், தற்போது மீண்டும் தனது தாய் பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக பணியைத் தொடர உள்ளார்.

தனது அயராத உழைப்பு, திறமை மற்றும் அல்லாஹ்வின் அருளால் இந்த உயரிய நிலையை அடைந்துள்ள அவருக்கு, சம்மாந்துறை தப்லீக்குள் இஸ்லாம் அரபுக் கல்லூரி பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அவரது கல்விசார் பணிகள் மேலும் சிறக்கவும், எதிர்காலத்தில் பல வெற்றிகளைப் பெறவும் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

♡     ⎙     ➦
ʳᵉᵃᶜᵗ  ˢᵃᵛᵉ  ˢʰᵃʳᵉ

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore