2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்ட திகதிகளிலேயே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நேற்று (மார்ச் 31) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
2026 – ஓகஸ்ட் 09 - க.பொ.த உயர்தரப் பரீட்சை
2026 – ஓகஸ்ட் 10 - க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
2026 – டிசம்பர் 08
“கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பரீட்சை திகதிகள் மாற்றமடைந்ததால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதனைத் தவிர்க்கவே 2025 செப்டம்பர் மாதமே 2026க்கான திகதிகள் அறிவிக்கப்பட்டன.”
மாணவர்கள் அந்தந்த திகதிகளுக்கு அமையத் தங்களது கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுக்குமாறு ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.





