சம்மாந்துறையில் AI மூலம் பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றி பரப்பிய வழக்கு – 19, 20 வயது இளைஞர்கள் கைது; மேலும் விசாரணைகள் தீவிரம்

சம்மாந்துறையில் WhatsApp status-ல் பகிரப்பட்டிருந்த பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி, அவற்றை Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி நிர்வாணமான ஆபாச படங்களாக உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பிய சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 20 வயதுடைய சில இளைஞர்கள் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று மேலும் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் சில சந்தேக நபர்களை கைது செய்வதற்காக சம்மாந்துறை பொலிஸார் தீவிரமான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
இவ்வாறான சம்பவங்கள் சமூகத்தில் கடுமையான மனஉளைச்சல் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிரும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும், பிறரின் புகைப்படங்களை அனுமதி இல்லாமல் மாற்றி பயன்படுத்துவது கடுமையான சட்டவிரோத குற்றமாகும் என்பதையும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு கடும் முன் எச்சரிக்கை ஆகும்.
சட்டத்தை மீறி தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதும் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டால் உடனடியாக சம்மாந்துறை பொலிஸாரிடம் முறையிடுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“தனியுரிமையை மதிப்போம் – தொழில்நுட்பத்தை நல்வழியில் பயன்படுத்துவோம்” என்ற செய்தியுடன், இத்தகைய குற்றங்கள் மீண்டும் நடைபெறாதவாறு சமூகமே விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore