Chemmani Mass Grave பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வு பணிகளில் இதுவரை 260 மனித உடல்களுடன் தொடர்புடைய எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழாய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 256 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்புக்கூட்டு எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துபாத்தி கூட்டுப் புதைகுழி பகுதியில் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழாய்வு நடவடிக்கைகள் நேற்று வெள்ளிக்கிழமை (08) 11ஆவது நாளாக தொடர்ந்தன.
இதன்போது மேலும் மூன்று மனித உடல்களுடன் தொடர்புடைய எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றில் இரண்டு உடல்களின் எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் கட்ட அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை மொத்தமாக 17 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




