இலங்கையில் கல்வி முன்னேற்றம்: PhD பட்டதாரிகள் 11,757 ஆக உயர்வு

இலங்கையில் உயர்கல்வி பெற்றோரின் எண்ணிக்கை கடந்த ஒரு தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு 2024 அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அறிக்கையின் முக்கிய கல்வி தகவல்கள் பின்வருமாறு:

🔹 PhD பட்டதாரிகள் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டின் 6,557 இலிருந்து 2024 ஆம் ஆண்டில் 11,757 ஆக உயர்ந்துள்ளது.
🔹 பட்டப்படிப்பு பெற்றோரின் எண்ணிக்கை 358,052 இலிருந்து 780,958 ஆக இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
🔹 உயர் கல்வி (Tertiary education) பெற்றோர் 18.2% இலிருந்து 26.2% ஆக உயர்ந்துள்ளனர்.
🔹 G.C.E. A/L அல்லது அதற்கு இணையான கல்வி பெற்றோர் 14.2% இலிருந்து 19.4% ஆக உயர்ந்துள்ளனர்.
🔹 இரண்டாம் நிலைக் கல்வி பெற்றோர் எண்ணிக்கை 7.07 மில்லியனில் இருந்து 8.09 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
🔹 ஆரம்பக் கல்வி மட்டுமே பெற்றோர் 18.4% இலிருந்து 12.5% ஆக குறைந்துள்ளனர்.
🔹 கல்வியே பெறாதோர் எண்ணிக்கை 4.7% இலிருந்து 2.9% ஆக குறைந்துள்ளது.

இந்த தகவல்கள், இலங்கையில் கல்வி நிலை மேம்பட்டு வருவதையும், மக்கள் அதிக அளவில் உயர்கல்வியை நோக்கி நகர்ந்து வருவதையும் காட்டுகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore