புத்தாண்டு சேவையில் சாதனை: 6 நாளில் ரூ.1 பில்லியன் வருமானம் பெற்ற SLTB!

சிங்கள–தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) 6 நாட்களில் ரூ.1 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது என அதன் தலைவர் சஜீவ நந்தன கனகரத்தின தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்த மக்களுக்கு சேவை வழங்கியதன் மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளது.

மேலும், ஏப்ரல் 11 ஆம் தேதி SLTB வரலாற்றிலேயே அதிக வருமானம் கிடைத்த நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நாளில் மட்டும் ரூ.213 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், புத்தாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, தனியார் பேருந்துகள் மூலம் 4 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகள் கொழும்பிலிருந்து வெளியூரங்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore