பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை – சிகை அலங்கார உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவை அமைப்புகள் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்திற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்யாமல் இருக்குமாறு சம்மாந்துறை பிரதேசத்தில் செயல்படும் சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிவுறுத்தலை மீறி செயல்படும் சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களின் கடை உரிமப்பத்திரம் (Licence) இரத்து செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore