டொனால்ட் டிரம்ப் குறித்து பதிவிட்ட நடிகர் மார்க் ஹமில்லுக்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனம்

Mark Hamill வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படத்தைத் தொடர்ந்து, Donald Trump குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது.

குறித்த பதிவில், டிரம்ப் ஒரு ஆழமற்ற கல்லறையில் படுத்திருப்பது போன்ற AI படம் இடம்பெற்றிருந்ததுடன், “if only” எனும் வாசகமும் இணைக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்த படத்தில் “Donald J. Trump 1946–2024” என எழுதப்பட்ட கல்லறைக் கல்லும் காணப்பட்டதாக BBC தெரிவித்துள்ளது.

இந்த பதிவைத் தொடர்ந்து, அமெரிக்க வெள்ளை மாளிகை, மார்க் ஹமிலை “மிகவும் நோய்வாய்ப்பட்ட மனநிலை கொண்ட நபர்” என கடுமையாக விமர்சித்துள்ளது.

Star Wars திரைப்படங்களில் “Luke Skywalker” கதாபாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற மார்க் ஹமில், பின்னர் அந்த பதிவை நீக்கி மன்னிப்பும் கோரியுள்ளார்.

“உண்மையில், அவர் இறப்பதை அல்ல, அதற்கு மாறானதைத் தான் விரும்பினேன். இருப்பினும், அந்த படம் உங்களுக்கு பொருத்தமற்றதாக தோன்றியிருந்தால் மன்னிக்கவும்,” என அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore