சுப்பர் டீசலின் விலையை உயர்த்திய சினோபெக்!

சினோபெக் நிறுவனம் நாளை (07) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசலின் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி 572 ரூபாயாக காணப்பட்ட ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 28 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 600 ரூபாவாகும்.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் லங்கா சுப்பர் டீசல் போன்றவற்றுக்கான விலைகள், அரசாங்கத்தின் அனுமதியுடன் நிலவும் சர்வதேச சந்தை விலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு உட்பட்டு, மறு அறிவித்தல் வரை இந்த விலைகள் நடைமுறையில் இருக்கும் என சினோபெக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore