சம்மாந்துறை Divisional உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி (08) சம்மாந்துறை பொதுமைதானத்தில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய Royal Madrit அணி, பலம் வாய்ந்த Evergreen அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2026 ஆம் ஆண்டிற்கான சம்மாந்துறை Divisional Football Champion பட்டத்தை கைப்பற்றியது.
போட்டியின் முழு நேரத்திலும் சிறப்பான அணித்திறன், வேகமான ஆட்டநடை மற்றும் ஒழுங்கான பாதுகாப்பு மூலம் Royal Madrit அணி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.




