இலங்கையில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் : இன்றைய அதிரடி விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரு பவுண் 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், இன்று 5,000 ரூபாயால் உயர்ந்து 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore