சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில், இரத்த பற்றாக்குறையை கருத்தில் கொண்டு சிறப்பு இரத்த தான முகாம் ஒன்று சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசலில் நாளை சனிக்கிழமை (18) காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
சம்மாந்துறை வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.
ஆரோக்கியமான ஒவ்வொருவரும் முன்வந்து இரத்த தானம் செய்து மனிதாபிமானப் பொறுப்பை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.





