சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட செந்நெல் கிராமம் 2 பகுதியில் நீண்டகாலமாக பாவிக்கப்படாமல் இருந்த பாதை தற்போது சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி புதர்கள் மற்றும் காடுகளால் மூடப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனை சீரமைக்க கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதேச சபை தவிசாளர் I. L. M. Mahir அவர்களின் தலைமையில், பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, பாதையில் இருந்த புதர்கள் மற்றும் புற்கள் அகற்றப்பட்டு, வீதி சமப்படுத்தப்பட்டு, மக்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களின் நீண்டநாள் தேவையை நிறைவேற்றிய முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீர் அப்னான் (பிரதேச சபை உறுப்பினர்)





