LPL சீசன் 6 : Icon வீரர்களுக்கு 2.5 இலட்சம் சமூக ஊடக பின்தொடர்பாளர்கள் கட்டாயம்

Lanka Premier League (LPL) சீசன் 6 தொடருக்கான வீரர் தகுதி விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இம்முறை கிரிக்கெட் அனுபவத்துடன் சமூக ஊடகப் பிரபலத்தன்மைக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, உயர்நிலை Icon பிரிவில் சேர விரும்பும் வீரர்கள் குறைந்தது 75 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். மேலும் 100க்கும் அதிகமான franchise T20 போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்பதுடன், கடந்த 18 மாதங்களில் குறைந்தது 30 போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.

அத்துடன், சமூக ஊடகங்களில் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான followers கொண்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Star பிரிவு வீரர்களுக்கும் இதேபோன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குறைந்தது 50 சர்வதேச T20 போட்டிகள் மற்றும் 100க்கும் அதிகமான franchise T20 போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். கடந்த 18 மாதங்களில் குறைந்தது 30 போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்பதுடன், 2.5 இலட்சத்திற்கும் அதிகமான சமூக ஊடக followers இருக்க வேண்டும்.

Gold பிரிவு வீரர்களுக்கு குறைந்தது 30 T20 சர்வதேச போட்டி அனுபவம், 75க்கும் மேற்பட்ட franchise போட்டி அனுபவம் மற்றும் கடந்த 18 மாதங்களில் 20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவசியமாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு குறைந்தது 1.5 இலட்சம் சமூக ஊடக followers இருக்க வேண்டும்.

Classic பிரிவு வீரர்கள் குறைந்தது 20 சர்வதேச T20 போட்டிகளிலும், 50க்கும் மேற்பட்ட franchise போட்டிகளிலும் விளையாடியிருக்க வேண்டும். மேலும், “நியாயமான ரசிகர் ஆதரவும் வர்த்தக கவர்ச்சியும்” அவசியமான தகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு வீரர்கள் கடந்த 12 மாதங்களுக்குள் தங்களது தேசிய அணிக்காக அல்லது Full Member Board தொடர்கள், International League T20 (ILT20) அல்லது Major League Cricket போன்ற உயர்தர T20 தொடர்களில் விளையாடியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓய்வு பெற்ற உள்ளூர் வீரர்களுக்கு இந்த தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள கட்டமைப்பின்படி, Icon மற்றும் Star பிரிவு வீரர்களுக்கு 60,000 முதல் 80,000 அமெரிக்க டொலர் வரை வழங்கப்படும். Platinum வீரர்களுக்கு 50,000 டொலர், Gold வீரர்களுக்கு 30,000 டொலர் மற்றும் Classic வீரர்களுக்கு 20,000 டொலர் வழங்கப்படவுள்ளது.

LPL 2026 தொடருக்கான வெளிநாட்டு வீரர் பதிவு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வீரர்கள் Sri Lanka Cricket LPL Registration Portal மூலம் பதிவு செய்யலாம்.

பதிவு நடவடிக்கைகள் 2026 மே 18ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LPL ஆறாவது சீசன் போட்டிகள் Sinhalese Sports Club Ground, R. Premadasa International Cricket Stadium, Pallekele International Cricket Stadium மற்றும் Rangiri Dambulla International Cricket Stadium ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்த தொடர் 2026 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளதாக Sri Lanka Cricket அறிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore