வானிலை திணைக்களம் நாளை (ஏப்ரல் 16) வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அதிக வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, 21 மாவட்டங்களில் சில பகுதிகளில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை (Heat Index) “Caution Level” வரை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான வெப்பத்தால் உடல் சோர்வு ஏற்படக்கூடும் என்றும், நீண்ட நேர செயல்பாடுகள் வெப்பக்கட்டுகள் (heat cramps) ஏற்படுத்தக்கூடும் என்றும் வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் போதிய தண்ணீர் பருகி, நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





