ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு நீர்ப்பம்பி கையளிப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் புதிய நீர்ப்பம்பி ஒன்று அண்மையில் வழங்கப்பட்டது.

ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, கே.ஆர்.எம்.றிசாட் (NWS&DB) முயற்சியின் பலனாக, TOI அமைப்பின் சம்மாந்துறை இணைப்பாளர் ஏ.எச்.எம். புவாத் (ஜே.பி) அவர்களினால் (2026.03.25) ஆம் திகதி பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இதன் மூலம் பள்ளிவாசலின் தினசரி தேவைகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும், குறிப்பாக தண்ணீர் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த சிரமங்களை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சமூகப் பணிகளில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் TOI அமைப்பிற்கும், இதனை பெற்றுக் கொள்ள எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore