சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வாகனப் பழுதுகள் காரணமாக மின்விளக்கு பராமரிப்பு பணிகள் தாமதமடைந்து, அதனைத் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில், அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் நாவிதன்வெளி பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில், நேற்று திங்கட்கிழமை நாவிதன்வெளி பிரதேச சபையின் மின்சாரப் பிரிவு ஊழியர்கள் வாகனத்துடன் சம்மாந்துறைக்கு அனுப்பப்பட்டனர்.
அதன்படி, பல பகுதிகளில் மின்விளக்கு பழுதுகளை சீரமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டன.
இந்த பணிகளை சிறப்பாக நிறைவு செய்ய ஒத்துழைத்த நாவிதன்வெளி பிரதேச சபையின் மின்சாரப் பிரிவு ஊழியர்கள், செயலாளர் மற்றும் கெளரவ தவிசாளர் ஆகியோருக்கு, சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.





