சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் , ஓய்வு பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர்
எம். எஸ். அப்துல் மஜீட்
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் பிரிவு எல்லைக்குள் அமைந்துள்ள 54 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் சம்மாந்துறை பொலிஸார் கடந்த 19.02.2026 முதல் 21.03.2026 வரை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி, ரமழான் மாதம் முழுவதும் பொலிஸ் ரோந்து பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பொலிஸ் அணிகள் பகலும் இரவும் தொடர்ச்சியான ரோந்து பணிகளில் ஈடுபட்டு, பள்ளிவாசல்களுக்கு வருகை தரும் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக தமது மத கடமைகளை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும், இந்த காலப்பகுதியில் உலமாக்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் ஆகியோருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் கிழக்கு மாகாண மூத்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட பொலிஸ் நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்பட்டதுடன், கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர சேர் (சட்டத்தரணி மட்டக்களப்பு), பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜீத் வெதமுல்ல (அம்பாரை மாவட்டம் ), சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் கஸ்தூரியாராச்சி (அம்பாரை), உதவிப் பொலிஸ் அத்தியச்சகர் இப்னு அசார் (கல்முனை), சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஸ்ஸங்க பிரதீப் குமார் அவர்களுக்கும், சிரமம் பாரது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும், சம்மாந்துறை மக்களின் சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டுள்ளது.
Special Security Provided to 54 Mosques in Sammanthurai During Ramadan – Public Express Gratitude to Police
By M. S. Abdul Majeed
Member, Sammanthurai Trustee Board & Retired Chief Police Inspector
In view of the Holy Month of Ramadan, special security arrangements were implemented by the Sammanthurai Police to ensure the safety of worshippers at 54 mosques located within the Sammanthurai Police Division. These security measures were carried out from 19.02.2026 to 21.03.2026.
During this period, Police Patrol Units and Traffic Police Officers were deployed day and night, continuously conducting patrol duties to ensure that Muslim devotees visiting mosques could safely and peacefully perform their religious obligations throughout the month of Ramadan.
In addition, religious scholars (Ulama), members of the public, motorists, and traders were also provided with necessary guidance and advice during this period to maintain safety, discipline, and harmony within the town.
These special security operations were carried out under the guidance of senior police officials of the Eastern Province and the District Police Administration.
On behalf of the people of Sammanthurai, sincere appreciation and gratitude are extended to:
Senior Deputy Inspector General of Police – Eastern Province, Mr. Varna Jayasundhara (Attorney-at-Law, Batticaloa)
Deputy Inspector General of Police – Ampara District, Mr. Sujeet Wedamulla
Senior Superintendent of Police – Ampara, Mr. Kasturiyarachchi
Assistant Superintendent of Police – Kalmunai, Mr. Ibn Azhar
Officer-in-Charge of Sammanthurai Police Station, Mr. Nissanga Pradeep Kumar
as well as to all the police officers who carried out their duties with dedication and commitment during this period.
The people of Sammanthurai sincerely express their deep appreciation and heartfelt thanks to the police officers for their tireless service in ensuring the safety of the community during the Holy Month of Ramadan, and pray that Allah grants His blessings upon all those who contributed to this noble effort.





