சம்மாந்துறை மஜீட்புர மக்களின் வேண்டுகோளை ஏற்று வருகை தந்து, “சக்தியுடன் ரமழான்” சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி சக்தி FM ஊடாக மஜீத் புரம் ஜும்ஆ பள்ளிவாசலில் பிரோஸ் தலைமையில் நேற்று (12) நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்நிகழ்வின் போது, ஊரில் வாழ்ந்து மரணித்த உறவுகளையும், அதேபோல் மத்திய கிழக்கு, ஈரான், பாலஸ்தீன் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்து அன்னவர்களுக்கு திருக்குர்ஆன் ஓதப்பட்டதுடன் சிறப்பு துஆ பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.
மேலும், இந்நிகழ்வை சிறப்பித்ததற்காக சக்தி FM ஊடக வலையமைப்பிற்கு மஜீட்புர மக்களின் சார்பாக நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வை சிறந்த முறையில் தொகுத்து வழங்கிய சக்தி எப்.எம் அறிவிப்பாளரும் சம்மாந்துறை ஊடக மையத்தின் தலைவருமான சுவதம் விருதுபெற்ற ஊடகவியளாளர் ஏ.பி.எம் இம்ரான் அவர்களுக்கும் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்த அனைவருக்கும் பிரோஸினால் நன்றி பாராட்டப்பட்டது





