அம்பாறை மாவட்ட செயலாளருக்கு பிரியாவிடை நிகழ்வு
அம்பாறை மாவட்ட செயலாளராக கடந்த 10.07.2023 அன்று கடமையேற்று பணியாற்றி வந்த மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அவர்கள் இடமாற்றலாகி பொது நிர்வாக அமைச்சுக்கு செல்ல இருப்பதையொட்டி, அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (11) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலகம் சார்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா , உதவி பிரதேச செயலாளர் வி. வாசீத் அஹமட்
கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா
நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில் , நலன்புரி அமைப்பின் பொருளாளர் எம்.டி.எம். மனாஸ்
உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரை பாராட்டினர்.
புதிய மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து
இதனிடையே, அம்பாறை மாவட்ட செயலாளராக இன்றைய தினம் (12) கடமைகளை பொறுப்பேற்ற அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்களுக்கு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
புதிய மாவட்ட செயலாளரின் தலைமையில் மாவட்டத்தின் நிர்வாக பணிகள் மேலும் சிறப்பாக முன்னேற வேண்டும் என்பதையும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.





