சம்மாந்துறையில் 28 லீற்றர் கசிப்புடன் இளைஞர் கைது

சம்மாந்துறை வீரமுனை 03 பகுதியில் இன்று (07) கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை பொலிஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, தன்வசம் வைத்திருந்த 30 லீற்றர் கசிப்புடன் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த கைது நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் ஆலோசனைக்கு அமைய,
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் வழிகாட்டுதலில்,
ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore