விஜய் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்

சர்வதேச அன்னையர் தினமான இன்று (10) தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்கவுள்ளார்.

அவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னர் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது முன்னேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி பல நிவாரணத் திட்டங்களை முன்வைத்து வாக்குறுதிகளை வழங்கினார்.

அதனால் அவரது தேர்தல் பிரச்சாரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அவ்வாறு விஜய் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளில் சில,

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500

ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை

பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்

100 காமராஜர் தர குடியிருப்பு பள்ளிகள்

ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன்

குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு

ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு திட்டம்

முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத ஓய்வூதியம்

200 யூனிட் இலவச மின்சாரம்

எல்லா வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்

5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள்

தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்

அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை

விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஆண்டு உதவித்தொகை

பயிர்க்கடன் தள்ளுபடி

100 சதவீதம் பயிர் காப்பீடு

5 லட்சம் சூரியகலன் கட்டமைப்புகள்

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.27 ஆயிரம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் பரிசீலனை

ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி

மாவட்ட வாரியாக தனி திட்டங்கள் ஆகிய வாக்குறுதிகளை தேர்தலுக்கு முன்னர் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் முதலமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் மூன்று முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore