Vietjet Air, இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான தனது முதல் நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு – ஹோ சி மின் நகரம் இடையிலான புதிய விமான சேவை 2026 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த அறிவிப்பு, கொழும்பில் நடைபெற்ற இலங்கை – வியட்நாம் வர்த்தக, முதலீட்டு மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு மாநாட்டின் போது வெளியிடப்பட்டது. இதில் வியட்நாம் ஜனாதிபதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் Tô Lâm மற்றும் பிரதமர் Harini Amarasuriya ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய சேவை வாரத்திற்கு நான்கு இருவழி விமான சேவைகளாக இயங்கவுள்ளதாகவும், இது சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான மக்கள் தொடர்புகளை வலுப்படுத்தும் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பிலிருந்து பயணிக்கும் பயணிகள் ஹோ சி மின் நகரத்திற்கான நேரடி அணுகலைப் பெறுவதுடன், அங்கிருந்து ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான இணைப்பு சேவைகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dinh Viet Phuong தெரிவித்ததாவது, இந்த புதிய சேவை இரு நாடுகளுக்கிடையே புதிய விமான இணைப்பை உருவாக்கி, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாசார பரிமாற்றத்தை மேம்படுத்தும்.
தற்போது Vietjet Air நிறுவனம் 135 விமானங்களை இயக்கி வருவதுடன், அதன் சர்வதேச விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மேலும் சுமார் 600 விமானங்களை ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




