கொழும்பின் பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை

கொழும்பின் பல பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலையிலிருந்து கடுவலைப் பகுதிக்கு நீரை வழங்கும் பிரதான விநியோகக் குழாயில் திடீர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (09) இரவு 7.30 மணி முதல் நாளை (10) பிற்பகல் 1.00 மணி வரை கடுவலை உட்பட பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கடுவலை, கொத்தலாவல, வெலிவிட்ட, ஹேவாகம, கொரதொட்ட, பொமீரிய, நவகமுவ, ரணால, கஹந்தோட்ட ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் செயலிழப்பு காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore