பாரியளவான போதைப்பொருட்களுடன் இளைஞர் கைது

மாதிவெல பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 58 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோகிராம் 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேகநபர் மாதிவெல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore