நடைபெற்று முடிந்த சம்மாந்துறை வலயமட்ட பெருவிளையாட்டு – 2026 , கரப்பந்தாட்டப் போட்டிகளில், சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் பெரும் சாதனையை பதிவு செய்துள்ளது.
16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் முதலாம் இடம் பெற்று சிறப்பித்ததுடன், மேலும் பல பிரிவுகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
பெறுபேறுகள்:
🥇 16 வயதின் கீழ் ஆண்கள் – முதலாம் இடம்
🥈 18 வயதின் கீழ் ஆண்கள் – இரண்டாம் இடம்
🥈 16 வயதின் கீழ் பெண்கள் – இரண்டாம் இடம்
🥈 18 வயதின் கீழ் பெண்கள் – இரண்டாம் இடம்

இந்த அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!




