வலய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி சாம்பியன்!

2026 ஆம் ஆண்டிற்கான வலய மட்ட பாடசாலை ஆண்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில், சம்மாந்துறை Sammanthurai Muslim Central College 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலயத்தில் முதலிடம் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், மாகாண மட்ட போட்டியில் வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் அணி பெற்றுள்ளது.

இதே வேளை , 2026 ஆம் ஆண்டிற்கான வலயமட்ட பாடசாலை 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் சம்மாந்துறை கமு/சது ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் உதைப்பந்தாட்ட அணி வலயத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்களின் இந்த வெற்றி, சம்மாந்துறை பகுதியில் விளையாட்டு திறமைகள் தொடர்ந்து வளர்ந்து வருவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore