தில்சாத் பர்வீஸ்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரியான ஆதம்பாவா முகம்மது நௌஸாத் இன்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இள வயதிலேயே திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களங்களில் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், மூதூர், சம்மாந்துறை, கிண்ணியா ஆகிய வலயக் கல்வி அலுவலகங்களில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
மேலும், மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகவும் சேவையாற்றிய இவர், கல்வி நிர்வாகத்தில் விரிவான அனுபவத்துடன் தற்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நிரந்தர அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இவரது நியமனம், கல்லூரியின் கல்வி தரத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



