புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லும் உத்தியோகத்தர்களுக்கு வழியனுப்பு நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா நகரத்திற்கு பயணம் செய்ய உள்ள உத்தியோகத்தர்களை வழியனுப்பும் நிகழ்வு இன்று (22) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி பிரதேச செயலாளர் வி. வாசீத் அஹமட், கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே. ரினோஸா உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுசைன், பிரதம முகாமைத்துவ சேவை உதவியாளர்கள், நிதி உதவியாளர், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவை அபிவிருத்தி உத்தியோகத்தர் மெளலவி ஐ.எல்.எம். ஏ. அஸ்மத்துல்லாஹ் (தப்லீகி) அவர்கள் நிகழ்த்தினார்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ. இர்பானா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம். ஹரீமா, கிராம உத்தியோகத்தர் வை.எல். ஜுமானா மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.எல். அமீர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இப்திகார் பானு அவர்களும் இம்முறை ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள நிலையில், இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore