சம்மாந்துறை அஸ்-சாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரியின் கல்வி மற்றும் மார்க்க செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தினால் ஒலிபெருக்கி (Amplifier) ஒன்று வழங்கப்பட்டது.
மாணவிகளின் கற்றல் நடவடிக்கைகள், கருத்தரங்குகள் மற்றும் மார்க்க சொற்பொழிவுகளை சிறப்பாக முன்னெடுக்க தேவையான ஒலிபெருக்கி வழங்குமாறு கல்லூரி நிர்வாகம் சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்திடம் விண்ணப்பித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, நிதியத்தின் பதில் தவிசாளர் டாக்டர் ILM றிஸ்வான் அவர்களின் முன்னெடுப்பில், நன்கொடையாளர்களிடமிருந்து ரூ. 77,500 தொகை சேகரிக்கப்பட்டு அந்தத் தொகையை பயன்படுத்தி ஒலிபெருக்கி கொள்வனவு செய்யப்பட்டது.
குறித்த ஒலிபெருக்கி (20) கல்லூரி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் நிர்வாக தலைவர் மற்றும் மத விவகார பணிப்பாளர் மௌலவி ABM றம்சீன் காசிபி அவர்களால், கல்லூரி அதிபர் மௌலவி AK நளீம் மற்றும் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சட்டப்பணிப்பாளர் சட்டத்தரணி AJM நவாஸ், பயனாளிகள் ஆய்வுக் குழுத் தலைவர் ML சலீம் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சதகா வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் தொடர்ந்து சமூக நலப்பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.





