“சகஸ்” திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் முன்பள்ளிகள் அழகுபடுத்தல் வேலைத்திட்டம்!

சம்மாந்துறை பகுதியில், “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் “சகஸ்” நிகழ்ச்சிக்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் செயல்படும் முன்பள்ளி பாடசாலைகளை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் கடந்த வியாழக்கிழமை (16.04.2026) முன்னெடுக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பிஸ்மில்லாஹ் முன்பள்ளி பாடசாலையில் சிரமதானப் பணிகள், மரநடுகை மற்றும் பாடசாலை சுற்றாடல் அழகுபடுத்தும் நிகழ்வு, பதில் தவிசாளர் V. Vinokanth அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதேபோன்று, பாத்திமா முன்பள்ளி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுகள், பிரதேச சபை செயலாளர் U. L. Abdul Majeed அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

மேலும், M.P.C.S முன்பள்ளி பாடசாலையில் நடைபெற்ற சிரமதானம், மரநடுகை மற்றும் சுற்றுச்சூழல் அழகுபடுத்தும் பணிகள், உள்ளூராட்சி உதவியாளர் U. S. M. Sadaath அவர்களின் தலைமையில் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில், நிதி உதவியாளர் எம். சத்தியநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பணிகளை சிறப்பாக முன்னெடுத்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore