சம்மாந்துறையில் இன்று இரண்டு தனித்தனியான திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்மாந்துறை , இஸ்மாயில்புரம் பகுதியில் வசித்து வந்த 39 வயதுடைய நபர், நேற்று இரவு உறங்கிய நிலையில் இன்று காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
மேலும் சம்மாந்துறை மலையடிக்கிராமம் 03 பகுதியில் வசித்து வந்த 41 வயதுடைய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னார்களின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற அனைவரும் பிரார்த்திப்போம்.





