சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் சேர் அவர்களின் திடீர் தற்காலிக இடமாற்றம், சம்மாந்துறை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்மாந்துறை பகுதியில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர், சட்டவிரோத செயல்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தைரியமாக செயல்பட்ட அதிகாரியாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர்.
குறிப்பாக, போதைப்பொருள் வியாபாரம், சட்டவிரோத செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட்ட பலரை தனது தனிப்பட்ட திறமையாலும் நேர்மையாலும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளார். இதனால் சம்மாந்துறை பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் என மக்கள் பாராட்டுகின்றனர்.
அவரது சேவைகள் காரணமாக, சம்மாந்துறை பகுதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சமூகத்தில் பாதுகாப்பு உணர்வு அதிகரித்துள்ளதுடன் சம்மாந்துறை மக்களின் பார்வையில் அவர் ஒரு நேர்மையான, தைரியமான மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரியாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவ்வாறு திடீரென அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, “ஊழலற்ற மற்றும் அரசியல் சாயமற்ற நிர்வாகம்” என்ற எதிர்பார்ப்புக்கு மாறானதாக உள்ளதாகவும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
“சம்மாந்துறை மண் இன்று ஒரு துணிச்சலான அதிகாரியை இழந்துள்ளது” என பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.
👉 “இவரைப் போன்ற அதிகாரி மீண்டும் சம்மாந்துறைக்கு கிடைக்குமா?”
👉 “இவரை மீண்டும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக பார்க்கவேண்டும்”
என்ற எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இருப்பினும், என். ரிபாய்டீன் சேர் போன்ற அர்ப்பணிப்பு மிக்க அதிகாரிகள் எங்கு சென்றாலும் தங்கள் சேவையால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையையும் மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
👉 சம்மாந்துறைக்கு அவர் செய்த சேவைகள் மறக்க முடியாதவை;
👉 அவரின் இடமாற்றம் ஒரு இழப்பு – ஆனால் அவரது பணிகள் மறக்க முடியாதது





