ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ்படை அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ்படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
“அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளால், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்ப்பாதை இப்போது எமது ஆயுதப் படைகளின் கடுமையான நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.” என குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.





