மாகாண மட்டப் போட்டிக்கு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய எல்லே அணி தெரிவு!

2026 ஆம் ஆண்டிற்கான வலய மட்ட பாடசாலை ஆண்கள் எல்லே போட்டியின் இறுதிப் போட்டி இன்று (11) செந்நெல் சாஹிரா வித்தியாலயய மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் (STR-MMMV) 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் எல்லே அணி, மாகாண மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற STR-MMMV அணிக்கும், அதனைப் பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

வலய மட்ட “Major Games ELLE Championship – 2026” இல் சிறப்பாக விளையாடிய இந்த அணி, எதிர்வரும் மாகாண மட்டப் போட்டியில் மேலும் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore