தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா சிறையில் இருந்து விடுதலை

Thaksin Shinawatra, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் விதிக்கப்பட்டிருந்த ஒரு ஆண்டு சிறைத் தண்டனையில் எட்டு மாதங்கள் அனுபவித்த பின்னர், பாங்காக்கிலுள்ள சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

76 வயதுடைய கோடீஸ்வர அரசியல்வாதியான தக்சினை வரவேற்க அவரது குடும்பத்தினரும் அரசியல் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கில் ஒன்று கூடியிருந்தனர். “We Love Thaksin” என கோஷமிட்டபடி, Klong Prem Central Prison சிறையிலிருந்து வெளியேறிய அவரை வரவேற்றனர்.

கடந்த 25 ஆண்டுகளாக தாய்லாந்து அரசியலில் முக்கிய செல்வாக்கு செலுத்திய தக்சின், சமீப காலங்களில் சிறைவாசம் மற்றும் அவரது Pheu Thai Party கட்சியின் தேர்தல் பின்னடைவு காரணமாக அரசியல் செல்வாக்கை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

எளிய வெள்ளை சட்டை அணிந்திருந்த தக்சின், உள்ளூர் நேரப்படி காலை 7.40 மணியளவில் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரை அவரது மகளும் முன்னாள் பிரதமருமான Paetongtarn Shinawatra உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றனர்.

2001 முதல் 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த தக்சின், வெளிநாட்டில் இருந்தபோது இராணுவ புரட்சியால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

15 ஆண்டுகள் தன்னிச்சை நாடுகடத்தலுக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டு தாய்லாந்து திரும்பிய அவர், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நலன் முரண்பாடு குற்றச்சாட்டுகளுக்காக எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்கொண்டார். பின்னர் அந்த தண்டனை மன்னரால் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டது.

தாய்லாந்து திரும்பிய சில மணி நேரங்களிலேயே உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், ஆறு மாதங்கள் VIP பிரிவில் சிகிச்சை பெற்று பின்னர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், தேவையற்ற சிறிய அறுவை சிகிச்சைகள் மூலம் மருத்துவமனையில் தங்கிய காலத்தை நீட்டித்ததாக நீதிமன்றம் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அந்த காலமும் சிறைத்தண்டனையாக கணக்கிடப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அண்மையில் 900-க்கும் மேற்பட்ட கைதிகளின் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டபோது, நல்ல நடத்தை, வயது மற்றும் மீண்டும் குற்றம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்பவற்றின் அடிப்படையில் தக்சினுக்கு பரோல் வழங்க நீதியமைச்சு குழு அனுமதி வழங்கியது.

தண்டனை காலம் முடியும் வரை அவர் மின்சார கண்காணிப்பு கருவி (electronic ankle monitor) அணிய வேண்டும் என சிறைத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது Pheu Thai Party கட்சி, பிரதமர் Anutin Charnvirakul தலைமையிலான கூட்டணி அரசில் இணைந்துள்ளது.

தக்சினின் மகள் பேத்தோங்தார்ன் 2024 ஆம் ஆண்டு தாய்லாந்தின் இளைய பிரதமராக பதவியேற்றிருந்தாலும், முன்னாள் கம்போடிய தலைவர் Hun Sen உடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் வெளியாகியதைத் தொடர்ந்து அரசியலமைப்பு நீதிமன்ற உத்தரவால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore