தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாக Samsung மீது Dua Lipa வழக்கு

பிரபல பிரித்தானிய பாப் பாடகி Dua Lipa, தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி Samsung Electronics நிறுவனத்திற்கு எதிராக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

30 வயதான பாடகி, Samsung நிறுவனம் தனது தொலைக்காட்சி பெட்டிகளின் வெளிப்புற அட்டைப்பெட்டிகளில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி தயாரிப்புகளை சந்தைப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“Dua Lipa – Backstage at Austin City Limits, 2024” என்ற தலைப்பில் உள்ள அந்த புகைப்படத்தின் அனைத்து உரிமைகளும் தமக்கே சொந்தமானவை என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புகைப்படம் தயாரிப்புகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாக பொதுமக்கள் நம்பும் வகையில் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் Samsung வர்த்தக நன்மை பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தனது பிரபலத்தன்மை மற்றும் வர்த்தக அடையாள உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக Dua Lipa தரப்பு தெரிவித்துள்ளது.

வழக்கில் சமூக ஊடக பதிவுகளின் ஸ்கிரீன்‌ஷாட்களும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் “Dua இருப்பதற்காகவே இந்த TV வாங்குவேன்” என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் குறித்து Samsung நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அந்தப் புகைப்படப் பயன்பாட்டை நிறுத்த மறுத்ததாக Dua Lipa-வின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என Samsung தரப்பு Reuters-க்கு தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore