சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வு!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தாதியர் தின விழா இன்று (12) வெகு சிறப்பாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி Dr D. பிரபா சங்கர் தலைமையில் வைத்தியசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்று உலக தாதியர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. புகழ்பெற்ற தாதியர் Florence Nightingale அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் இந்நாளில் நவீன தாதியர் துறையின் முன்னோடியாகவே கருதப்படுகின்றார். நோயாளி பராமரிப்பில் அவரது பங்களிப்பு உலகளவில் புரட்சியை ஏற்படுத்தியமைக்காக 1965 ஆம் ஆண்டு முதல் மே 12 அன்று உலக தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தாதியர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பை மதிப்பிடும் சிறப்பு நாளாகும்.

உலக தாதியர் தினத்தினை முன்னிற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தாதியர்களுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் இங்கு தாதியராக கடமையாற்றி மரணித்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்ஞலி செலுத்தப்பட்டதுடன் ஓய்வு பெற்ற தாதியர்களும் நினைவு கூறப்பட்டது.

இந் நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையினுடைய திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr.A.R.நியாஸ் அஹ்மத், பிரதம தாதிய பரிபாலகி Mrs. சாஜிதா M. ஜமீல்,தாதிய பரிபாலகி Mrs. M. C. S. சமாயிலா தாதியசங்கச் செயலாளர் Mrs. M.C.M. பரீஸ் , தர முகாமைத்துவ பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் M. I. M. அஸ்ஹர் ,விடுதி முகாமையாளர்களான Mr. P. சந்திரகுமார ,Mrs. R. S. இஸ்முனா ஆகியோருடன் மட வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore