எரிபொருள் சேமிக்கவும் : இந்தியர்களுக்கு பிரதமர் மோடியின் வேண்டுகோள்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்ற நிலை காரணமாக உருவாகியுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு, எரிபொருள் பயன்பாட்டையும் தேவையற்ற செலவுகளையும் குறைக்குமாறு இந்திய பிரதமர் Narendra Modi மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தவும், ஒரே வாகனத்தில் பலர் இணைந்து பயணிக்கும் car-pooling முறையை பின்பற்றவும், மின்சார வாகனங்களை பயன்படுத்தவும் மக்களை ஊக்குவித்தார்.

மேலும், இயன்றவரை நிறுவனங்கள் மீண்டும் work-from-home நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்கள், வெளிநாடுகளில் நடைபெறும் திருமண விழாக்கள் மற்றும் தேவையற்ற தங்க கொள்முதல்களை தவிர்க்குமாறும் பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க உதவும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இரசாயன உரங்களின் பயன்பாட்டை 50% வரை குறைத்து இயற்கை விவசாய முறைகளுக்கு மாறுமாறும் இந்திய விவசாயிகளிடம் அவர் அழைப்பு விடுத்தார்.

கல்ஃப் பிராந்தியம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இந்தியா பொருளாதார அழுத்தத்துக்கு முகங்கொடுத்து வரும் பின்னணியில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore